Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுவா ஒலோந்துவுக்கு மரியாதை.. - தொகுதியை கைவிட்டது ஜனாதிபதி கட்சி!

பிரான்சுவா ஒலோந்துவுக்கு மரியாதை.. - தொகுதியை கைவிட்டது ஜனாதிபதி கட்சி!

17 ஆனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 11516


வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து Corrèze தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட இம்மானுவல் மக்ரோன், தனது கட்சி சார்பாக அத்தொகுதியில் வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சிகள் ஒன்றினைந்து கூட்டமைப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறன. பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு 289 ஆசனங்கள் கட்டாயம் தேவை எனும் நிலமை உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, La France insoumise கட்சி சார்பாக Corrèze தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனாதிபதியின் Renaissance கட்சி சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் அத்தொகுதியில் நிறுத்தவில்லை.

பிரான்சுவா ஒலோந்து மீது மிகுந்த மரியதை கொண்ட இம்மானுவல் மக்ரோன், இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்