Paristamil Navigation Paristamil advert login

காஸாவின்  அமைதி  நிலைத்திருக்க வேண்டும் -  ஜோ பைடன்

காஸாவின்  அமைதி  நிலைத்திருக்க வேண்டும் -  ஜோ பைடன்

17 ஆனி 2024 திங்கள் 09:08 | பார்வைகள் : 2565


உலகம் முழுவதும்  பக்ரீத் பண்டிகை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இது வரையில் சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர்.

அச்சத்துடனும் பாலஸ்தீன மக்கள் பக்ரீத் பண்டிகையன்று வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்றமையால் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த செய்தியில், ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து உள்ளனர்.

3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். 

இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.

இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த பக்ரீத் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்