பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. இருவர் கைது..!

17 ஆனி 2024 திங்கள் 13:16 | பார்வைகள் : 14053
நேற்று ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
14 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Montrouge பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு நள்ளிரவு 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்து பல துப்பாக்கிச்சன்னங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த நபர் Clamart (Hauts-de-Seine) நகரில் உள்ள Antoine-Béclère மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாகவும், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், Malakoff (Hauts-de-Seine) பகுதியில் இருவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1