Paristamil Navigation Paristamil advert login

Yvelines : பதினொரு வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!

Yvelines : பதினொரு வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!

17 ஆனி 2024 திங்கள் 14:29 | பார்வைகள் : 7740


வளர்ப்பு நாய் ஒன்று 11 வயதுடைய சிறுவன் ஒருவனை கடித்துக்குதறியுள்ளது. உயிருக்காபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு Mantes-la-Ville (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் அவனது நண்பனின் குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது, நண்பனின் வளர்ப்பு நாய் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக சிறுவனைக் கடித்து குதறியுள்ளது.

சிறுவனின் முகத்தில் பாய்ந்து கடித்து சதையை பிய்த்து எடுத்துள்ளது.

சிறுவன் உடனடியாக Mantes-la-Jolie நகரில் உள்ள François-Quesnay மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். அவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்