Paristamil Navigation Paristamil advert login

அமலாபாலுக்கு ஆண் குழந்தை... பெயர் என்ன தெரியுமா?

அமலாபாலுக்கு ஆண் குழந்தை... பெயர் என்ன தெரியுமா?

17 ஆனி 2024 திங்கள் 15:26 | பார்வைகள் : 408


நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார். கர்ப்பமானது முதல் பலவிதமான போட்டோஷூட்டுக்களை அவர் பதிவு செய்து வந்திருந்தார் என்பதும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட அவர் சில போட்டோஷூட்களை பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் ஜூன் 11ஆம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது குழந்தைக்கு ’ILAI’ என்ற பெயர் வைத்துள்ளதாகவும் இது கிறிஸ்தவ மதத்தின் புகழ்பெற்ற பெயர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் வீடு திரும்பும் அமலாபாலை அவரது குடும்பத்தினர் அலங்காரத்துடன் வரவேற்ற காட்சி, வீடு முழுவதும் பலூன்கள் பறக்கும் காட்சி, அதை பார்த்து அமலாபால் ஆச்சரியப்படும் காட்சி இந்த வீடியோவில் உள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்