Paristamil Navigation Paristamil advert login

கல்யாண வீட்டு சாம்பார்.

கல்யாண வீட்டு சாம்பார்.

17 ஆனி 2024 திங்கள் 15:37 | பார்வைகள் : 198


சாம்பார் என்றாலே நம்மில் பலருக்கு ரொம்பவே இஷ்டம். அதுலயும் கல்யாணம் விட்டு சாம்பார் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு முறைக்கு இரண்டு முறை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். பொதுவாகவே, சாம்பாரில் நாம் சேர்க்கும் பருப்பில் ப்ரோட்டின் அதிகமாகவே உள்ளதால், அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும் சிலருக்கு வீட்டில் வைக்கிற சாம்பார் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு முறை சாம்பார் வைத்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி.. வாங்க, இப்போது இந்த பதிவில், வீட்டிலேயே மணக்க மணக்க கல்யாணி வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


ADVERTISEMENT

இதையும் படிங்க: வீட்ல காய்கறி இல்லையா? அப்ப இந்த  வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.. ஆரோக்கியத்திற்கும் நல்லது!

கல்யாண வீட்டு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி விதைகள் - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் - 4
வத்தல் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 
தக்காளி 2
பீன்ஸ் - 10
கேரட் - 2
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2
நெய் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு


கல்யாண வீட்டு சாம்பார் செய்ய முதலில், பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் முருங்கைக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எடுத்து வைத்த துவரம் பருப்பு மற்றும்  பாசி பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி, அதை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூளையும்  சேர்த்து மூன்று விசில் வைத்து இறக்கவும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எடுத்து வைத்த கடலைப்பருப்பை போற்று நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின், அதில் மல்லி விதைகள், சீரகம், வெந்தயம், வத்தல் என அனைத்தையும் போட்டுபொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு,  எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் இதனுடன்சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வறுக்கவும். பின் அதனை நன்கு ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு வெந்தயம் சேர்த்து தாளிக்கவும் பிறகு, இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பெண் இதில் வெட்டி வைத்துள்ள கேரட் பீன்ஸ் கத்தரிக்காய் முருங்கைக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இவை நன்கு வதங்கியதும் அதில் சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு வேக வையுங்கள்.

காய்கறிகள் நன்கு வெந்தவுடன்,  எலுமிச்சை பழ அளவிற்கு புளியை கரைத்து, அந்தக் கரை சேலை அதில் ஊற்றுங்கள். பின், இதில் வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு பத்து நிமிடம் கொதிக்க வையுங்கள்.

குழம்பு நன்று நன்றாக கொதித்த பிறகு அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலக்கவும். பின், சிறிதளவு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில், மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார் ரெடி!! இந்த சாம்பார் நீங்கள் சாதம் மட்டுமின்றி இட்லி தோசையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்