திருமண அறிவிப்பை வெளியிட்ட 'பிக் பாஸ்’ பிரதீப் ஆண்டனி
17 ஆனி 2024 திங்கள் 15:42 | பார்வைகள் : 6786
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரதீப் அந்தோணி என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாயா, பூர்ணிமா உள்ளிட்ட ஒரு சிலரின் சதி காரணமாக வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த சதியில் கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டினார்கள் என்பதும் தெரிந்தது.
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருந்தால் கூட கிடைக்காத பேரும் புகழும் அவர் வெளியேறிய பின்னர் கிடைத்தது என்பதும் அவர் தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதாகவும் சில படங்களில் நடித்துக் கொண்டும் ஒரு படத்தை இயக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதீப் அந்தோணி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் மணமகளுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கெல்லாம் நடக்காதுன்னு நினைச்சேன், பரவால்ல பொண்ணு கொடுக்குறாங்க என்ன நம்பி, இது 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று கேப்ஷனாக பிரதீப் அந்தோணி பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவரை திருமணம் செய்ய போகும் மணப்பெண் குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan