Paristamil Navigation Paristamil advert login

உலக நாயகன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா?

 உலக நாயகன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா?

17 ஆனி 2024 திங்கள் 15:50 | பார்வைகள் : 1620


கோலிவுட் எனும் குறுகிய வட்டத்தை தாண்டி உலக நாயகன் என உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்புக்கு ஈடு இவரே என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த உலக நாயகன் இன்று அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்தியன் 2, கல்கி ஏடி2898, தக் லைஃப் ஆகிய திரைப்படங்களில் உருவாகி வருகின்றன

இந்தியன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலும் கமல் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல,கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து கமல் நாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கும் படம் கல்கி. பிரபாஸ் நாயகனாக இதில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குவது குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். நான் அத்தகைய படத்தை இயக்க வாய்ப்பே இல்லை, என் அனுபவத்திற்கு அப்பாவை நான் இயக்குவது எளிதல்ல, அந்த பணியை செய்ய பல நல்ல தகுதியான இயக்குநர்கள் உள்ளனர் என தெரிவித்தார்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்