Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சுக்குள் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்!!

இல்-து-பிரான்சுக்குள் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்!!

18 ஆனி 2024 செவ்வாய் 07:31 | பார்வைகள் : 8743


இல் து பிரான்ஸ் சாலைகளில் இன்று ஜூன் 18, செவ்வாய்க்கிழமை காலை எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் பதிவானது.

காலை 9 மணி நிலவரப்படி 610 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவானது. இன்று அதிகாலை முதலே பதிவாகி வரும் அடை மழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் வீதியை மூடி வெள்ளம் பாய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக பரிசின் தெற்கு புறநகரில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை அனர்த்தம் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் எதிர்பாராமல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்