Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் மாட்டிறைச்சி  கலந்த புதிய அரிசி...

தென் கொரியாவில் மாட்டிறைச்சி  கலந்த புதிய அரிசி...

18 ஆனி 2024 செவ்வாய் 07:55 | பார்வைகள் : 2041


தென் கொரியாவின் தலைநகர் சியோலில் மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஓர் அற்புதமான உணவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பை இந்த அரிசியில் சேர்ப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த 'இறைச்சி அரிசி'யை எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளிலும், கிரக ஆய்வுகளிலும் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு வகையான சத்தான அரிசியாக அறிமுகப்படுத்துவார்கள் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதுடன் இது வெண்ணெய் போன்ற வாசனை கொண்டுள்ளது.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்