Paristamil Navigation Paristamil advert login

வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்து அணியோடு மோதுவாரா Kylian Mbappé?

வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்து அணியோடு மோதுவாரா Kylian Mbappé?

18 ஆனி 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 3520


ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று (17/06/2024) France அணியும் Autriche அணியும் மோதியது இதில் 1 க்கு 0 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றியை தனதாக்கியது. இருப்பினும் பிரான்ஸ் அணியின் தலைவரும் (Capitaine)நட்சத்திர ஆட்டக்காரருமான Kylian Mbappé மூக்கில் படுகாயம் அடைந்து இரத்தம் வழியும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். Kylian Mbappé காயமடைந்த நிழல் படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு "வருகின்ற வெள்ளிக்கிழமை Pays-Bas அணியுடன் மோதும் பிரான்ஸ் அணியில் அதன் தலைவர் (capitaine) Kylian mbappe களம் இறங்குவாரா என அங்கலாய்த்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் உதைபந்தாட்ட அணியின் முன்னாள் மருத்துவர் Jean-Pierre Paclet "நிச்சயமாக Kylian mbappe யால் விளையாட முடியும் என்றே நினைக்கிறேன், அவர் ஏற்கனவே சத்திர சிகிச்சை தவிர்த்திருக்கிறார் எனவே விளையாட முடிவெடுத்துள்ளார் என நம்புகிறேன், ஆனாலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஓய்வு வேண்டும். காரணம் அவர் விளையாடும் போது சுவாசிப்பதில் கஷ்டம் இருக்க கூடாது" என தெரிவித்த மருத்துவர் "இதற்காகவே பித்தியோக முகக்வசம் இருக்கிறது அதோடு விளையாடுவதற்கு அனுமதியும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்