Paristamil Navigation Paristamil advert login

நீட் தேர்வில் சின்ன அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும்: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில் சின்ன அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும்: உச்சநீதிமன்றம்

18 ஆனி 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 1910


நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், 'நீட் தேர்வில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும்,' எனக்கூறியதுடன், நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறும் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தபோது, ''நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், ''நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது'' எனக் கூறியதுடன், நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்