இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்?
27 ஆவணி 2023 ஞாயிறு 14:08 | பார்வைகள் : 3665
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சி தொடருமானால் மேலும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதுடன், அனல் மின் உற்பத்தி காரணமாக தற்போது மின்சாரத்தை தடையின்றி வழங்க முடிந்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
சமனல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 1 வீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 21 வீதமாகவும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 35 வீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 25 வீதமாகவும் குறைந்துள்ளது.
இதன்படி, 300 கிகாவாட் மணிநேர நீர் மின்சாரத்தையே உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 65 வீதமாக அதிகரித்துள்ளது.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் 11 சதவீத மின்சார உற்பத்தி தேசிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.