கடும் கோபத்தில் தீவிர வலதுசாரிகள்... எம்பாபே மீதான விமர்சனம் தொடர்கிறது..!
19 ஆனி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7359
உதைபந்தாட்ட வீரர் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே. இந்நிலையில், அவர் மீதான விமர்சனங்கள் இன்னும் குறையவில்லை. தீவிர வலதுசாரிகள் அவர் மீது தொடர் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.
"அடிப்படைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்!” என எம்பாபே தெரிவித்த கருத்தே, பலர் கோபமடைய காரணமாக அமைந்தது.
Rassemblement National கட்சித்தலைவரும் வேட்பாளருமான Jordan Bardella தெரிவிக்கையில், 'நான் அனைத்து உதைபந்தாட்ட வீரர்களையும் மதிக்கிறேன். அவர்களில் இளைஞர்களின் அடையாளமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதே இளைஞர்களை மதிக்க வேண்டும். அனைவரது வாக்களிக்கும் முடிவினையும் மதிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்களுக்கு பெரிய சம்பளம் கிடைக்கும் அதிஷ்ட்டம் இருக்கிறது. நீங்கள் ஒரு மில்லியனராக இருக்கின்றீர்கள். விளையாட்டு வீரர்களை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. நீங்கள் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு பாடம் சொல்லி கொடுங்கள். பாதுகாப்பான வாழ்க்கை குறித்து பாடம் எடுங்கள். நகர்ப்புறங்களில் வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் சூழ்நிலை குறித்து எடுத்துரையுங்கள்!” என மிகவும் காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தார்.