Paristamil Navigation Paristamil advert login

குவைத் தீ விபத்தில் 49 பேர் பலி...!  நிதி உதவி வழங்க தயாராகும் அரசாங்கம்!

 குவைத் தீ விபத்தில் 49 பேர் பலி...!  நிதி உதவி வழங்க தயாராகும் அரசாங்கம்!

19 ஆனி 2024 புதன் 08:45 | பார்வைகள் : 2342


குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலும் இந்தியர்களும் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் என பலியானார்கள்.

பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கும் செய்யப்பட்டது.

இந்நிலையில் தீ விபத்தில் பலியானவர்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12.50 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது.

மேலும் குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்