ஹஜ் பயணிக்கும் இஸ்லாமியர்கள் - சவுதி அரேபியாவில் பலியாகும் அவலம்
19 ஆனி 2024 புதன் 09:03 | பார்வைகள் : 2858
சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் செய்துக்கொண்டுள்ள யாத்ரீகர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவிற்கு யாத்திரை செல்வதாகும்.
இந்த யாத்திரையானது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வருடத்திறாக யாத்திரையில் உலகெங்கிலும் இருந்து சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் யாத்திரை மேற்கொண்ட பலரும் உயிரிழந்து வந்தனர்.
அதையடுத்து தற்போது பலி எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட சுமார் 550 யாத்ரீகர்கள் பலியாகி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.