Paristamil Navigation Paristamil advert login

“சதை உண்ணும் பக்டீரியா” - இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

 “சதை உண்ணும் பக்டீரியா” - இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

19 ஆனி 2024 புதன் 09:37 | பார்வைகள் : 507


ஜப்பான் முழுவதும் 'சதை உண்ணும் பக்டீரியா' என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து  கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை ஜப்பானில் கிட்டத்தட்ட 1,000  பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளன. இதனால்  பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

இந்த நோய் கடுமையானதாக இருந்தாலும், இது ஒரு புதிய அல்லது அசாதாரணமான நிலை அல்ல என   இலங்கையின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்.

"எஸ்.டி.எஸ்.எஸ் ஒரு சிகிச்சையளிக்கக்கூடிய பக்டீரியா தொற்று என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்வது முக்கியம்.    ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுத்ததாக அறிக்கைகள் இருந்தாலும், இந்த நிகழ்வுகள் அரிதானவை" என்று டாக்டர் கினிகே உறுதியளித்தார். 

உலகளாவிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், வெளிவரும் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கான முக்கிய செய்தி என்னவென்றால் அச்சம் கொள்ள தேவையில்லை, ஆனால் எஸ்டிஎஸ்எஸ் உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்