Paristamil Navigation Paristamil advert login

GUD அமைப்புக்குத் தடை... தீவிர ஆலோசனையில் உள்துறை அமைச்சர்..!!

GUD அமைப்புக்குத் தடை... தீவிர ஆலோசனையில் உள்துறை அமைச்சர்..!!

19 ஆனி 2024 புதன் 11:18 | பார்வைகள் : 4671


ஒவ்வொரு தொழிற்சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் போது நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னாலும், GUD (Groupe union défense) எனும் ஒரு அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர்.  தீவிர வலதுசாரிகளாக அவர்கள், அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சங்கத்தினரின் பின்னால் மறைந்துள்ள அவர்களை தடை செய்ய உள்துறை அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், 'அவர்கள் (GUD குழுவினர்) வெள்ளை மேலாதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். வலதுசாரிகளுடன் இணைந்து செயற்படும் அவர்கள் பல்வேறு யூத எதிர்ப்பு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். அக்குழுவை கலைப்பது தொடர்பில் ஆலோசனை ஒன்று முன்வைக்க உள்ளேன்!' என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

'GUD அமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் மரீன் லு பென்னுடன் நட்பாக இருக்கின்றனர். அவர்கள் ஜனநாயகமாக இல்லை!' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்