Paristamil Navigation Paristamil advert login

தீபாவளிக்கு வெளியாகிறது அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம்..!

 தீபாவளிக்கு வெளியாகிறது அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம்..!

19 ஆனி 2024 புதன் 11:18 | பார்வைகள் : 1215


லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, பிரியா பவானி ஷங்கர், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லராக விடா முயற்சி படம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. விடாமுயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் காலநிலை காரணமாக படப்பிடிப்பு சிறிது நாட்கள் நிறுத்தப்பட்டது. அதன் பின் பட பிடிப்பு தொடங்கியதா என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அஜர்பைஜானில் இருந்து திரும்பிய நடிகர் அஜித், தனது பைக் ட்ரிப்பை தொடங்கினார். விடாமுயற்சி படப்பிடிப்பு என்ன ஆனது? படம் கைவிடப்பட்டதா? என்று பல கேள்விகளை ரசிகர்கள் இணையத்தில் எழுப்பி வந்தனர்.

பினான்சியல் நெருக்கடியால் விடாமுயற்சி படப்பிடிப்பு சிறிது நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “Good Bad Ugly” படத்தில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்றும், ஜூன் 24 ஆம் தேதி அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் அஜித் இன்று மாலை அஜர்பைஜான் கிளம்புகிறார் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஊறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த முறை தல தீபாவளி தான் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்