இலங்கை நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 50க்கு மேற்பட்டோர் காயம்

19 ஆனி 2024 புதன் 13:06 | பார்வைகள் : 6172
கடுவலை, ரனால பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (19) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது 20 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் நவகமுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.