ரஷ்யா படைவீரர்களுக்கு பிறப்பித்துள்ள பயங்கர உத்தரவு

20 ஆனி 2024 வியாழன் 08:50 | பார்வைகள் : 7377
ரஷ்யா தன் படைவீரர்களுக்கு பயங்கர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஆதாரமாக அச்சத்தை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்யப் படைவீரர்கள், தங்களிடம் சிக்கும் உக்ரைன் வீரர்களின் தலைகளை வெட்டி, அவற்றை தங்கள் கவச வாகனங்கள் மீது வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு ஆதாரமாக, Donetsk பகுதியில், ரஷ்ய கவச வாகனம் ஒன்றின் மீது, உக்ரைன் வீரருடையது என கருதப்படும், வெட்டப்பட்ட தலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ட்ரோன் ஒன்றின் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, Andriy Kostin என்னும் உக்ரைன் அதிகாரி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Volnovakha மாகாணத்தில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய படைப்பிரிவொன்றின் தளபதிகள் இந்த பயங்கர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, தங்களிடம் சிக்கும் உக்ரைன் வீரர்களை போர்க்கைதிகளாக பிடித்துவராமல், அதற்கு பதிலாக அவர்கள் தலைகளைத் துண்டிக்க ரஷ்யப் படைவீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.