பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர் கைது

20 ஆனி 2024 வியாழன் 09:22 | பார்வைகள் : 6298
ரிஷியின் பாதுகாவலர்களில் ஒருவரான Craig Williams என்பவர், தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் செய்த குற்றம், தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என்பது தொடர்பில் பந்தயம் கட்டியதாகும்.
பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வில்லியம் தேர்தல் திகதி குறித்து 100 பவுண்டுகள் பந்தயம் கட்டியுள்ளார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறையை எட்டியதைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, வில்லியம் குறித்து பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025