Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் படைகளை முற்றாக ஒழிக்க முடியாது -  இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் படைகளை முற்றாக ஒழிக்க முடியாது -  இஸ்ரேல் அறிவிப்பு

20 ஆனி 2024 வியாழன் 09:30 | பார்வைகள் : 2918


பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் படைகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளர் ஒருவரே ஹமாஸ் தொடர்பில் புதன்கிழமை தங்களது கருத்தை பதிவு செய்துள்ளார். 

ஆனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட இஸ்ரேல் அரசாங்கம், ஹமாஸ் படைகளின் அழிவு தான் தங்களின் இலக்கு என அறிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் கடந்த  ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் படைகள் திடீரென்று முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, 8 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

ஆனால் காஸா பகுதியில் இருந்தே இஸ்ரேல் ராணுவத்தால் ஹமாஸ் படைகளை ஒழிக்க முடியவில்லை, மாறாக பரவலான அழிவைக் கொண்டு வந்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவத்தின் ரியர் அட்மிரல் Daniel Hagari ஹமாஸ் தொடர்பில் தமது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

அதில், ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிப்பதாக இஸ்ரேல் கூறி வருவது, மக்களின் கண்களில் மண் அள்ளி வீசுவது போன்றது என்றார். 

மேலும், இஸ்ரேல் தரப்பால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஹமாஸ் படைகளை ஒழிப்பது சாத்தியமற்றது என்றார்.

ஹமாஸ் என்பது சித்தாந்தம், ஒரு சித்தாந்தத்தை நம்மால் ஒருபோதும் அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, தளபதி டேனியல் ஹகாரியின் கருத்துகள் இஸ்ரேலில் பூகம்பத்தை கிளப்ப, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் உடனடியாக பதிலளித்துள்ளது.

மேலும், ஹமாஸ் படைகளை ஒழிக்கும் மட்டும் காஸா மீதான தாக்குதல் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

இஸ்ரேல் ராணுவத்தால் மட்டுமே ஹமாஸ் படைகளை ஒழிக்க முடியும் என்றும், அது கொள்கை முடிவு எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் படைகளை ஒழிக்கும் பொருட்டு இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதலில், சிறார்கள் மற்றும் பெண்கள் உட்பட கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,500 கடந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்