Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் - 3 பேர் கைது

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் - 3 பேர் கைது

20 ஆனி 2024 வியாழன் 13:04 | பார்வைகள் : 458


யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , நேற்று (18) மூவரை கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்