Paristamil Navigation Paristamil advert login

■ பரிசில் தீ விபத்து... எட்டு பேர் காயம்..!

■ பரிசில் தீ விபத்து... எட்டு பேர் காயம்..!

20 ஆனி 2024 வியாழன் 16:58 | பார்வைகள் : 1502


இன்று வியாழக்கிழமை பிற்பகல் பரிசில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். 

16 ஆம் வட்டாரத்தின் avenue Dode de la Brunerie பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் 1 மணி அளவில் தீ பரவியுள்ளது. நபர் ஒருவர் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பொது, எதிர்பாரா விதமாக அங்கிருந்தே தீ பரவல் ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நான்காவது தளத்தில் இருந்து தீ, மேற்தளங்களுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 

சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் தீயணைப்பு படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்