முதல் CNG பைக்கை வெளியிடும் Bajaj., திகதி, விலை விபரம்
21 ஆனி 2024 வெள்ளி 08:33 | பார்வைகள் : 976
பஜாஜ் (Bajaj Auto) நிறுவனம் தனது முதல் CNG பைக்கை ஜூலை 5-ஆம் திகதி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பைக் வெளியீட்டு விழாவின் ஊடக அழைப்பிதழில் பஜாஜ் நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அழைப்பிதழுடன் வரவிருக்கும் பைக்கின் வடிவமைப்பின் படத்தையும் பஜாஜ் பகிர்ந்துள்ளது.
உலகின் முதல் CNG பைக் இதுவாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக, Pulsar NS400Z வெளியீட்டு விழாவில், பஜாஜ் ஆட்டோ எம்டி ராஜீவ் பஜாஜ் ஜூன் 18-ஆம் திகதி பைக் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார், ஆனால் சில காரணங்களால் வெளியீட்டு திகதி ஜூலை 17 வரை நீட்டிக்கப்பட்டது.
வெளியீட்டு திகதி அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று நிறுவனத்தின் செயல் அதிகாரி ராகேஷ் சர்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் சிஎன்ஜி பைக்கின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இப்போது அதிகாரப்பூர்வ ஊடக அழைப்பில், சிஎன்ஜி பைக் ஜூலை 5-ஆம் திகதி வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் சிஎன்ஜி பைக்கின் பெயர் Fighter அல்லது Bruiser ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அழைப்பிதழில் வெளியான புகைப்படத்தில், பஜாஜ் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளில் ஒரு தட்டையான நீளமான ஒற்றை இருக்கை, மற்றும் வட்ட வடிவ ஹெட்லாம்ப் காணப்படுகிறது.
பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் டேங்க் கொண்ட இரட்டை எரிபொருள் டேங்க் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த CNG பைக் சோதனையின் போது பல சந்தர்ப்பங்களில் இந்திய சாலைகளில் காணப்பட்டது.
பஜாஜின் சிஎன்ஜி பைக்கின் ஆரம்ப விலை 80,000 ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.