வாக்னர் தலைவரின் மரணம் உறுதி - மூலக்கூறு மரபணு ஆய்வு
28 ஆவணி 2023 திங்கள் 07:59 | பார்வைகள் : 6387
ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்த நிலையில் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் தரையில் விழுந்து சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 10 உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணித்தியாலம் கழித்து எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்தார்.
பிரிகோஜின் மரணம் குறித்து உறுதிப்படுத்துவதற்காக விசாரணை மற்றும் சோதனையை ரஷ்ய பரிசோதனை குழு மேற்கொண்டு வந்தது.
விமான விபத்தில் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என்பது குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியான மூலக்கூறு மரபணு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணித்தியாலம் கழித்து எவ்ஜெனி பிரிகோஜின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்தார்.
இருப்பினும் பிரிகோஜின் மரணம் குறித்து உறுதிப்படுத்துவதற்காக விசாரணை மற்றும் சோதனையை ரஷ்ய பரிசோதனை குழு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் விமான விபத்தில் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என்பது குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியான மூலக்கூறு மரபணு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.