Paristamil Navigation Paristamil advert login

அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்ற தீவிர வலதுசாரி கட்சியின் தலைவரான Jordan Bardella யார்?

அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்ற தீவிர வலதுசாரி கட்சியின் தலைவரான Jordan Bardella யார்?

21 ஆனி 2024 வெள்ளி 12:09 | பார்வைகள் : 1991


'Rassemblement national' கட்சியின் தலைவரும் , "வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த வேண்டும்" எனவும், "double frontière, எல்லையில் இரட்டிப்பு பாதுகாப்பு போடப்பட வேண்டும்" எனவும், "குடியேற்றவாசிகள் உடனடியாக மட்டுப்படுத்தப்பட வேண்டும்" என இனவாத கருத்துக்களை வழங்கி வருகின்ற, அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை (RN) "எமது கட்சிக்கு கிடைக்காவிட்டால் பிரதமராக பதவி ஏற்க மாட்டேன்" என தெரிவித்துள்ள Jordan Bardella யார்?

13 செப்டம்பர் 1995ல்  Seine-Saint-Denis  (93) மாகாணத்தில் Drancy நகரில் பிறந்தவர், அவரின் தந்தையான Olivier Bardella 1968 அதே Seine-Saint-Denis  (93) மாகாணத்தில் Montreuil நகரில் பிறந்தவர், தந்தையின் வம்சாவளி italienne மற்றும் franco-algérienne. அவரின் தாயாரான Luisa Bertelli-Mota இத்தாலியில் 1962ல் Turin நகரில் பிறந்த இத்தாலியர்.

அன்று 'Front national' என அழைக்கப்பட்ட இன்றைய 'Rassemblement national' கட்சியில் 2012ம் ஆண்டில் தனது 17வது வயதில் இணைந்து கொண்டார், 2015 இல் பாராளுமன்ற உதவியாளரானார். அவர் 2017 முதல் 2019 வரை கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், 2018 முதல் அதன் தேசிய அலுவலகத்தில் உறுப்பினராகவும், இருந்து வந்துள்ளார். 

தனது 23து வயதில் 2019ல் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான 'Rassemblement national' கட்சியின் வேட்பாளர்களில் தலைமை வேட்பாளராக களம் இறங்கிய அவர் (MEP) ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அதே வேளையில் தீவிர வலதுசாரி கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் பதவி உயர்ந்தார். பின்னர் 'Rassemblement national' கட்சியின் தலைவரும் அரசுத்தலைவர் வேட்பாளருமான Mme Marine Le Pen அவர்களால் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2022ல் பிரான்சில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலின் போது (RN) கட்சியின் தற்காலிக தலைவராக செயல்பட்ட Jordan Bardella, அதே ஆண்டு கட்சியின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் நடந்த தேர்தலில் Louis Aliot அவர்களுடன் போட்டியிட்டு தலைவராக தெரிவானார்.

தொடரும்...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்