Paristamil Navigation Paristamil advert login

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற தேர்தலை விட அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். உள்துறை அமைச்சகம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற தேர்தலை விட அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். உள்துறை அமைச்சகம்.

21 ஆனி 2024 வெள்ளி 12:10 | பார்வைகள் : 4071


இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று  முக்கோண வடிவத்தில் அமையும். தீவிர வலதுசாரிகள் ஒரு புறமும், இடதுசாரிகள் ஒருபுறமும், இன்று ஆளும் கட்சியினர் ஒருபுறமும் என  முக்கோண வடிவத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று அமைந்திருக்கும் எனவும் இரண்டாவது சுற்று இரு கட்சிகளுக்கு எதிர் எதிராய் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது சுற்றை விட இரண்டாவது சுற்று பாடசாலை விடுமுறை நாட்களுக்குள் அமைந்ததால் பலர் தங்களின் வாக்கினை மற்றொருவர் மூலம் வாக்களிக்கும் முறையான 'procurations' முறையை நாடியுள்ளனர், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி இதுவரை 1,055,067 பேர் 'procurations' முறைக்கு பதிவு செய்துள்ளனர். 2022 தேர்தலுடன் ஒப்பிடும் போது இது 6.3. மடங்கு அதிகம் என தெரிய வருகிறது.

மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான 'Nouveau Front populaire' (NFP) கூட்டணிக்கும், தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national (RN) கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் தெரியவருகிறது.

பெரும்பாலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசு தலைவர் ஒரு கட்சியாகவும், அரசாங்கம் இன்னுமொரு கட்சியாகவும் அமையும் சாத்திய கூறுகளே அதிகம் தென்படுவதாகவும்அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே Jacques Chirac அவர்களின் ஆட்சியின் இரண்டாம் கட்டம் Lionel Jospin அவர்களின் தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி அரசமைத்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்