ஒலிம்பிக் போட்டிகளின் போது - மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கட்டுப்பாடு... குற்றப்பணம்..!
21 ஆனி 2024 வெள்ளி 13:31 | பார்வைகள் : 3737
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது, போட்டிகள் இடம்பெறும் அரங்கங்களைச் சூழ சில வீதிகளின் ஒரு பகுதியை ஏற்பாட்டாளர்களுக்கும், வீரர்களுக்கும் ஒதுக்கப்படும். அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
'ஒலிம்பிக் பாதை' என பிரிக்கப்பட்ட குறித்த பகுதியினூடாக மோட்டார் சைக்கிள்கள் பயணித்தால், அவர்கள் குற்றப்பணம் செலுத்த நேரும் என பரிஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் வரை (ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை) மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு €135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.