இலங்கைக்கு நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிக்கும் நாடு

21 ஆனி 2024 வெள்ளி 14:12 | பார்வைகள் : 9703
பல வருடங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட பிலிப்பைன்ஸின் மணிலாவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் Leo Tito L. Ausan தெரிவித்துள்ளார்.
இந்த நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொட்டகதெனியவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பிலிப்பைன்ஸ் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தர எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிப் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க பிலிப்பைன்ஸ் தயாராக இருப்பதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3