Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் ப்ரைட் ரைஸ்

சிக்கன் ப்ரைட் ரைஸ்

21 ஆனி 2024 வெள்ளி 14:44 | பார்வைகள் : 763


அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவது சிக்கன். சிக்கனில் பல வகையான உணவுகளில் செய்யலாம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் சிக்கன் பிரைடு ரைஸ். பொதுவாகவே, பலர் இதை ஹோட்டல்களில் தான் அடிக்கடி விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நம் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ப்ரைட் ரைஸ் சுலபமாக செய்யலாம்.. அது எப்படி என்று தெரிஞ்சுக்க இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்..

ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
சிக்கன் 65 - தேவையான அளவு 
குடைமிளகாய் - 2 
கேரட் - 1
பீன்ஸ் - 15
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
முட்டை - 2
சில்லி சாஸ் - 1ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி இலை -  சிறிதளவு

ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்ய, எடுத்து வைத்த குடைமிளகாய் வெங்காயத்தை நீள வாய்க்கில் நறுக்கி கொள்ளுங்கள். பிறகு பீன்ஸ் கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாசுமதி அரிசியை உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.

இதனை அடுத்து ஏற்கனவே ரெடி தயாரித்து வைத்த சிக்கன் 65 இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து இதில் சிறிதளவு உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து வேக வையுங்கள். காய்கறி பாதி வெந்தவுடன் சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் பிரைடு ரைஸ் ரெடி!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்