Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பிறந்த "fête de la musique" இசைத் திருவிழாவுக்கு இன்று வயது (21/06/2024) நாற்பத்திரெண்டு.

பிரான்சில் பிறந்த

21 ஆனி 2024 வெள்ளி 16:37 | பார்வைகள் : 3138


இன்று உலகில் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படும் 'Fête de la musique' இசைத் திருவிழா 1982ம் ஆண்டு பிரான்ஸ் தேசத்தில் உருவானது. பிரான்ஸ் மண்ணில் இசைத்துறையில் பணியாற்றி அமெரிக்கா இசைக் கலைஞரான Joel Cohen அவர்களுக்கு மனதில் ஒரு சிந்தனை பிறந்தது அதன் வடிவமே இந்த இசைத் திருவிழா.

ஓராண்டில் இரண்டு நாட்கள் ஒற்றுமையில் வேற்றுமை உள்ள நாட்கள் ஒன்று ஜூன் 21, அடுத்து டிசம்பர் 21. ஜூன் 21 அதிக நேரம் பகல்வேளையையும், டிசம்பர் 21 அதிக நேரம் இரவு வேளையையும் கொண்டது. அதேவேளை ஜூன் 21 கோடைகாலத்தின் ஆரம்ப நாளாகவும் உள்ளது. எனவே இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என Joel Cohen விரும்பினார்.

அவர் ஒரு இசைக்கலைஞன் என்பதால் அந்த நாளை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நிகழ்த்த விரும்பினார். அதன் எண்ணத்தை ஜூன் 21 1976ல் பாரிஸ் மேற்கிலும், Toulouse நகரிலும் நடத்தியும் காட்டினார். அதேபோல் ஒரு தொலைக்காட்சி செவியலும் தனது கருத்தை  Joel Cohen  முன் வைத்திருந்தார்.

 Joel Cohen அவர்களின் திட்டத்தை அன்று கலாச்சார துறையில் அதிகாரியாக இருந்த Jack Lang அவர்கள் 21 juin 2015 ஒரு தொலைக்காட்சி செவ்வியில் வரவேற்று பேசியதுடன் இதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்கின்ற தனது எண்ணத்தையும் முன்வைத்தார். 

1982ல் பிராசின் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக  Jack Lang பதவியேற்ற போது Joel Cohen அவர்களின் திட்டமான இசை திருவிழா 'fête de la musique' திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கினார். பெரும் இசை திருவிழாக்களை பணம் செலுத்தி பார்க்க முடியாத இசை ரசிகர்களுக்கும், அரங்கங்கள் கிடைக்காத இசை கலைஞர்களுக்கும் ஒரு சிறப்பு நாளாக அவர் இதனை அறிமுகப்படுத்தினார். அன்று பிரான்ஸ் தேசத்தில் பிறந்த இசை திருவிழா 'fête de la musique' இன்று உலகின் பல நாடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்