உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறும் Gérald Darmanin.
21 ஆனி 2024 வெள்ளி 19:13 | பார்வைகள் : 4699
"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் (RN) கட்சி பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்றால் "நான் பிரதமராக பதவியேற்க்க மாட்டேன்" என 'Rassemblement national' கட்சியின் தலைவர் Jordan Bardella கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் Gérald Darmanin தன் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் அதன் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin. இன்று பிரான்சின் வடபகுதி நகரமான Lilleக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் "ஒலிம்பிக் போட்டிகளின் போது தான் பெரும்பாலும் உள்துறை அமைச்சராக இருக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார் "RN அல்லது NFP வெற்றிபெற்றால் தனது அமைச்சுப் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வேன்" எனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தேர்தல் வாக்கெடுப்பில் ஜூலை 7ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தோல்வியடைந்தால் தான் அரசாங்கத்தை விட்டே வெளியேறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.