Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 19 வயதுடைய இளைஞன் கைது!

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 19 வயதுடைய இளைஞன் கைது!

22 ஆனி 2024 சனி 05:05 | பார்வைகள் : 6393


பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இல் து பிரான்சுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து C வகை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது குறித்த நபர் யூத மக்களை இலக்குவைத்து தாக்குதல்  ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

முன்னதாக, ஜூன் 13 ஆம் திகதி வியாழக்கிழமை இல் து பிரான்சுக்குள் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். வரும் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் முனைப்புடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டே குறித்த 19 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்