Paristamil Navigation Paristamil advert login

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

22 ஆனி 2024 சனி 09:08 | பார்வைகள் : 300


பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி (Bugatti)  (ஜூன் 21) புதிய ஹைப்பர் கார் Tourbillon-ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Bugatti நிறுவனம் 2016-க்குப் பிறகு சந்தையில் இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
காரின் மிகவும் சிறப்பு வாய்ந்த விடயம் அதன் சக்திவாய்ந்த எஞ்சின் ஆகும், இது 22 Maruti Suzuki Swift-களுக்கு சமமான ஆற்றலை உருவாக்குகிறது.

Swift 80.46hp பவர் கொண்ட எஞ்சினுடன் வருகிறது, அதே சமயம் Bugatti Tourbillon 1800 horse power திறன் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்ட Hyper Car ஆகும்.

Bugatti Tourbillon 0-100 கிமீ வேகத்தை 2 வினாடிகளில் அடையும் என்று நிறுவனம் கூறுகிறது.

Bugatti Tourbillon-ன் ஆரம்ப விலை 4.6 மில்லியன் டொலர்களாக ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.140 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் 250 யூனிட்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் என கூறியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செய்யும்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்