Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸியின் மிரட்டலான ஆட்டம்- இன்டர் மியாமி அணி வெற்றி

மெஸ்ஸியின் மிரட்டலான ஆட்டம்- இன்டர் மியாமி அணி வெற்றி

28 ஆவணி 2023 திங்கள் 11:32 | பார்வைகள் : 6468


நியூ யார்க் ரெட் புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, PSG அணியில் இருந்து அமெரிக்க அணியான இன்டர் மியாமியில் இணைந்ததில் இருந்து அந்த அணி வெற்றிகளை குவித்து வருகிறது.

Red Bull Arena மைதானத்தில் நடந்த போட்டியில், இன்டர் மியாமி அணி நியூ யார்க் ரெட் புல்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் தியாகோ கோம்ஸ் அபாரமாக கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் 1-0 என மியாமி முன்னிலை வகித்தது.

அதன் பின்னரான இரண்டாம் பாதியில் ரெட் புல்ஸ் அணி மியாமிக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தது.

89வது நிமிடத்தில் மெஸ்ஸி வித்தை காட்டி மிரட்டலாக கோல் அடித்தார்.

அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. இன்டர் மியாமி 2-0 என்ற கோல் கணக்கில் நியூ யார்க் ரெட் புல்ஸை வீழ்த்தியது.

31ஆம் திகதி நடைபெற உள்ள நாஷ்வில்லே அணியை மியாமி எதிர்கொள்கிறது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்