ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் இணைய சேவை, மின்சாரம் முடக்கம்...
22 ஆனி 2024 சனி 11:21 | பார்வைகள் : 9655
ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக முடங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாண்டினீக்ரோ பகுதியில் 400 கிலோவாட் மின்கடத்தி வெடித்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நான்கு நாடுகளிலும் போக்குவரத்து விளக்கு வேலை செய்யாத நிலையில், சாலைகளில் வாகனங்கள் சிக்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணைய சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலர் தங்கள் வாகனங்களை நெரிசலில் இருந்து மீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய மருந்து வாங்கவும் முடியாமல் பலர் திணறியுள்ளனர்.
மட்டுமின்றி வெப்பநிலை 40C என சுட்டெரிக்க, திடீர் மின்வெட்டும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள Banja Luka, Prnjavor, Kotor Varoš, Sarajevo, Derventa, Palam, Trebinje, Gack மற்றும் Nevesinje ஆகிய பகுதிகளில் மொத்தமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சில பகுதிகளில் மின்சாரம் மீண்டதுடன், போக்குவரத்தும் சீரானாதாக தகவல் வெளியானது. குரோஷியாவில் Dubrovnik மற்றும் Konavle பகுதிகள் மொத்தமாக ஸ்தம்பித்தது.
இது சர்வதேச சதியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குரோஷியா தரப்பில் கூறப்பட்டது. அல்பேனியாவில் தலைநகர் Tirana உட்பட Durrës, Elbasan, Kukës மற்றும் Korçë ஆகிய நகரங்கள் மொத்தமாக ஸ்தம்பித்தன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan