Paristamil Navigation Paristamil advert login

 உக்ரைனுக்கு  உதவி கரங்களை நீட்டும் பல்வேறு நாடுகள்

 உக்ரைனுக்கு  உதவி கரங்களை நீட்டும் பல்வேறு நாடுகள்

22 ஆனி 2024 சனி 15:45 | பார்வைகள் : 609


உக்ரைனுக்கு Patriot air defense system-த்தை வழங்குவதாக ருமேனியா அரசு உறுதியளித்துள்ளது. 

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன.

அந்த வகையில் ஐரோப்பிய நாடான ருமேனியா ''Patriot air defense system'' எனும் சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 

'உக்ரைனில் பாதுகாப்பு நிலைமையின் குறிப்பிடத்தக்க சரிவைக் கருத்தில்கொண்டு, கவுன்சில் உறுப்பினர்கள் உக்ரைனுக்கு ஒரு PATRIOT அமைப்பை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்'  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 'இந்த முக்கியமான பங்களிப்பு எங்கள் வான் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்தும் மற்றும் ரஷ்ய வான் பயங்கரவாதத்தில் இருந்து எங்கள் மக்களையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சிறப்பாக பாதுகாக்க உதவும்'' என கூறினார்.

ஜெர்மனி தனது சொந்த மூன்று தளங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்