La Courneuve : சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு! - ஒருவர் கைது...!
22 ஆனி 2024 சனி 19:00 | பார்வைகள் : 11679
La Courneuve (Seine-Saint-Denis) நகரில் இருந்து இருந்து சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள Georges-Valbon பூங்காவில் இருந்து இவ்வார செவ்வாய்க்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்டிருந்தது. உடல் முற்றாக சிதைவடைந்த நிலையில், மேலாடை இன்றி சடலம் மீட்கப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், இன்று ஜூன் 22, சனிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவருடைய 29 வயதுடைய சகோதரன் ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, காணாமல் போயிருந்த குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
La Courneuve நகரில் Georges-Valbon பூங்கா 400 ஹெக்டேயர்கள் இடப்பரப்பை கொண்டுள்ளது. அப்பகுதி மக்களிடையே நன்கு அறியப்பட்ட குறித்த பூங்காவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan