Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : விடுதி ஒன்றின் பாதுகாவலர் சடலமாக மீட்பு..!

பரிஸ் : விடுதி ஒன்றின் பாதுகாவலர் சடலமாக மீட்பு..!

23 ஆனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6333


பரிசில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்த பாதுகாவலர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் rue Keller வீதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் அவசர இலக்கத்துக்கு (17) அழைக்கப்பட்டது. அதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பாதுகாவலரின் அறையில், கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாவலர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அதேவேளை, குறித்த விடுதியில் இருந்து பணம் வைக்கப்படும் பாதுகாப்பு பெட்டகமும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விடுதிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், பாதுகாவலரைக் கொன்றுவிட்டு, கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கண்காணிப்பு கமராக்களில் பதிவாக காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்