இஸ்ரேல், பலஸ்தீன் போர் நாடு கடந்து பிரான்ஸ் வரை பரவிவிட்டது. Jonathan ARFI.

23 ஆனி 2024 ஞாயிறு 07:01 | பார்வைகள் : 7731
கடந்த வாரம் ஒரு சனிக்கிழமை Courbevoie பகுதியில் உள்ள பொதுமக்கள் பூங்கா ஒன்றின் கைவிடப்பட்ட பகுதியில் வைத்து 12 வயது சிறுமி ஒருவர், 12 வயது முதல் 13 வயது வரையான மூவரால் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த மூன்று சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
முதலில் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்காக கருதி நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சிறுவர்களும், பாதிக்கப்பட்ட சிறுமியும் வழங்கிய வாக்குமுலம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நீதி கோரி நடத்தப்பட்டு வருகிறது.
குறித்த சிறுமி "யூதப் பெண் எனவேதான் நாங்கள் அவரைத் தாக்கினோம், பாலியல் வன்கொடுமை செய்தோம்" என குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சிறுவர்களும், "தன்னை தாக்கும் போது யூத எதிர்ப்பு வார்த்தைகளை சொல்லியே தாக்கினார்கள்" என பாதிக்கப்பட்ட சிறுமியும் வாக்குமூலம் அளித்துள்ளானர்.
இதனையடுத்து நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களில் நேற்று Courbevoie நகரசபை முன்றலில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பல இன மக்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த பிரான்ஸ் வாழ் யூதர்களின் கூட்டமைப்பின் பிரதிநிதி Jonathan ARFI "கடந்த ஒக்டோபர் ஹமாஸ் தீவிரவாதிகள் யூதர்கள் மீது தொடங்கி போர் இன்று நாடு கடந்து பிரான்ஸ் வரை வந்துள்ளது, உலகில் யூதர்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை" என தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை புரிந்த மூவரில் 13 வயதுடைய இருவரும் விசாரணையின் பின்னர் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது 12 வயதுடைய சிறுவன் நன்னடத்தை சிறையில் வைக்கப்பட்டுள்ளான்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1