Paristamil Navigation Paristamil advert login

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது.

23 ஆனி 2024 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 8257


அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை 30/06 முதல் சுற்றாகவும், ஜூலை 7ஆம் திகதி இரண்டாவது சுற்றாகவும் நடைபெற இருக்கின்ற பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இன்றைய நிலையில் தீவிர வலதுசாரிகளின் கைகள் ஓங்கி இருக்கிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

நேற்றைய தினம் 'franceinfo' வானொலி, தொலைக்காட்சி நிறுவனமும், 'Le Parisien' பத்திரிகையும் நடத்திய கருத்துக் கணிப்பில் 'Rassemblement national' (RN)கட்சியும், Éric Ciotti தலைமையிலான Le Républicains (LR) கட்சியும் இணைந்து 35.5% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும், அதாவது RN 31.5% சதவீதம், LR 4% சதவீதம். அதேபோல் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான 'Nouveau Front populaire' கட்சியினர்  29,5%, சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய ஆழும் தரப்பு மூன்றாவது இடத்தில் 19,5% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் "தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் இடதுசாரிகளுக்கு 'Nouveau Front populaire' வாக்களியுங்கள்" எனும் குரல் பல மட்டங்களில் இருந்து வலுவாக எழுந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்