Paristamil Navigation Paristamil advert login

ஐபோனுக்கு போட்டியாக பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்யும் Samsung

ஐபோனுக்கு போட்டியாக பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்யும் Samsung

23 ஆனி 2024 ஞாயிறு 07:59 | பார்வைகள் : 1684


சாம்சங் நிறுவனம் ஐபோனுக்கு போட்டியாக Face ID தொழில்நுட்பத்தை தமது போன்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிள் நிறுவனம் (Apple) தமது ஐபோனில் Face ID தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

தனி நபரின் பாதுகாப்பு மற்றும் ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் காரணத்திற்காக, பல ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனமும் (Samsung) பயன்படுத்த உள்ளது. 

இதற்காக அந்நிறுவனம் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. அதாவது Face IDக்கு பதிலாக Polar ID எனும் தொழில்நுட்பத்தை தமது போன்களில் சாம்சங் கொண்டுவர உள்ளது. 

2025ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பத்துடன் சாம்சங் மொபைல் போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எக்ஸ் தளத்தின் Haizaki Ryouheiயின் tipster-யில் இருந்து வெளியானது.

அதில், சாம்சங் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் சாம்சங் கேலக்சி S25 போனில் PolarIDயை வெளியிட உள்ளது. இந்த தொழில்நுட்பம் தற்போது சந்தைக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது. 

இது FaceID போல் இல்லாமல், கூடுதல் சென்சார்கள் தேவைப்படாது. மேலும் இது அதிகப்படியான இடத்தை எடுத்துக் கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் FaceIDயுடன் ஒப்பிடும்போது இது அதிக பாதுகாப்பாகவும், சிறந்த செயல் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Samsung ISOCELL Vizion 931 ஏற்கனவே அதன் சோதனை கட்டத்தில் உள்ளது என்றும், அது Galaxy S25 Ultra போனில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள ஐபோனில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றத்தை திட்டமிட்டு வருகிறது.

ஆனால், சாம்சங் நிறுவனமோ Galaxy S26 Ultra போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு In Display finger print Sensor-ஐ வழங்குவதன் மூலமாக, ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக Biometric Optionsஐ சாம்சங் நிறுவனம் வழங்க உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்