சீனாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்த ராக்கெட் பாகம்... பீதியில் மக்கள்

23 ஆனி 2024 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 6066
சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து முதல் வானியல் செயற்கை கோளை விண்ணில் ஏவியதாக தகவல் வௌியாகியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட்டில் அந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் மீண்டும் பூமி நோக்கி வேகமாக வந்தது.
புகையை கக்கியபடி வேகமாக வந்த ராக்கெட்டின் பாகத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்தப்படி ஓடினர்.
வேகமாக பூமியை நோக்கி வந்த அந்த ராக்கெட் பாகம் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்தான தகவல் வெளியாகவில்லை.
குடியிருப்புக்குள் ராக்கெட் பாகம் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3