பிரான்சில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு கொள்ளைச் சம்பவம்... கேள்விக்குறியாகியுள்ள பாதுகாப்பு..!!

23 ஆனி 2024 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 5664
பிரான்சில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் 220,000 கொள்ளைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவானதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 600 கொள்ளைச் சம்பவங்களும், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருதடவை கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 14% சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த கொள்ளைச் சம்பவம் பிரான்சில் 20% சதவீதம் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இன்னும் ஒன்றரை மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.