Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : 9.3 கிலோமீற்றர் தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்து சாதனை..!

Seine-Saint-Denis : 9.3 கிலோமீற்றர் தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்து சாதனை..!

23 ஆனி 2024 ஞாயிறு 17:02 | பார்வைகள் : 14727


இன்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை Seine-Saint-Denis மாவட்டத்தில் மிக நீண்ட மனிதச் சங்கிலி (chaîne humaine ) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



”நாங்கள் இப்போது ஒரு விதிவிலக்கான சூழ்நிலையில் இருக்கின்றோம். ஒற்றுமை - சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புக்கள் தீவிரமான ஆபத்தில் உள்ளன. அது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 93 ஆம் மாவட்டத்தில் அதி அதிகமாக காணப்படுகிறது” என இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

93 ஆம் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து l'Ourcq ஆற்றைச் சுற்றி இந்த மனிதச்சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டு, அது வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்கப்பட்டது.




 

வர்த்தக‌ விளம்பரங்கள்