இயற்கையான முறையில் நரை முடி கருப்பாக மாற...
28 ஆவணி 2023 திங்கள் 14:20 | பார்வைகள் : 8409
நரைமுடி ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பிரச்சினையாக உள்ளது. நரை முடி வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இயற்கையான பொருட்கள் மூலமே நரை முடியை கருப்பாக மாற்ற முடியும்.
சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் நரை குறையும்.கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது நரை ஏற்படாமல் காக்கும்.தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்.
மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர நரை குறையும்.
தினம் ஒரு டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்கலாம்.


























Bons Plans
Annuaire
Scan