Paristamil Navigation Paristamil advert login

பூமியை தாக்கப்போகும் சக்திவாய்ந்த சிறிய கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியை தாக்கப்போகும் சக்திவாய்ந்த சிறிய கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

24 ஆனி 2024 திங்கள் 09:02 | பார்வைகள் : 157


பூமியை சிறிய கோள் ஒன்று 72 சதவீதம் தாக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 20ஆம் திகதி ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதில் பூமி மீது சக்தி வாய்ந்த சிறிய கோள் ஒன்று மோத உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் அமெரிக்காவின் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் சர்வதேச குழுவினர் என சுமார் 100 பிரதிநிதிகள் வரை இணைந்து ஆய்வினை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வில், குறித்த கோள் பூமியை 72 சதவீதம் தாக்குவதற்கு சாத்தியக்கூறு உள்ளதாகவும், 2038ஆம் ஆண்டு சூலை 12ஆம் திகதி மோதும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த சிறிய கோளின் அளவு, அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் நீண்டகால இயங்கு பாதை உள்ளிட்ட விவரங்களை சரியாக தீர்மானிக்க முடியவில்லை என்றும், இதன் மோதலை தடுக்க போதிய அளவில் நாம் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது. 

நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரியான லிண்ட்லே ஜான்சன் கூறும்போது, ''இந்த கோளின் மோதலானது இயற்கை பேரிடரில் ஒன்றாக இருக்கிறது.

எனினும், தொழில்நுட்ப உதவியுடன், மனிதகுலம் அதனை முன்பே கணிக்கக் கூடிய ஒன்றாகவும் உள்ளது. இதுதவிர இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்