பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 18 போட்டியாளர்கள் யார் யார்?

28 ஆவணி 2023 திங்கள் 14:25 | பார்வைகள் : 8608
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 18 போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்து உள்ளது. ஏற்கனவே நாம் கூறியவாறு கமல்ஹாசனிடம் கார் பரிசு பெற்ற கோவையை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிலி இந்த நிகழ்ச்சியில் கலந்து உள்ளார். அதனை அடுத்து நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய மூவரும் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி, நடிகை தர்ஷா குப்தா மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா என்பவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் விஜே பார்வதி, நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிகிறது.
மொத்தத்தில் இந்த சீசனின் போட்டியாளர்கள் தேர்வு மிக சிறப்பாக அமைந்துள்ளதை அடுத்து செம்ம போட்டி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1